ஏழைகளின் வயாகரா!சரோஜாதேவி பதில்கள்

* காமத்தின் நிறம் என்ன?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
சிலருக்கு நீலம்; சிலருக்கு மஞ்சள்; நிறமா பாஸ் முக்கியம்?

* கோன் ஐஸ்-கப் ஐஸ்-குல்பி ஐஸ்; எது சூப்பர்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
குல்பிதான். ஏழைகளின் வயாகரான்னே அதை சொல்லலாம்.

* அணில் கடித்த பழத்துக்கு மட்டும் ஏன் அதிக சுவை?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
அணிலுக்கு எது காய், எது பழமென்று தெரியும். சுவையான பழத்தைத்தான் தேர்ந்தெடுத்து கடிக்கும்.

* பெட்ரூம் காட்சிகளில் நடிப்பவர்கள் எப்படி உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள்?
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.
யூனிட் ஆட்கள் சுற்றி 100 பேர் இருக்க எப்படி சார் உணர்ச்சி வரும்?

* புரட்டாசியில் ‘புரட்சி’ செய்யலாமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
நான் ஏதாவது யதார்த்தமாக சொல்லப் போயி, ஹெச்.ராஜா என்னை பதார்த்தமாக்கிடப் போறாரு. ஆளை விடுங்க சாமி!