பரோட்டா!சரோஜாதேவி பதில்கள்

* ‘பாலும் பழமும்’ என்றால் நினைவுக்கு வருவது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
உங்களுக்கு மட்டும் பழைய சிவாஜி படமா நினைவுக்கு வரும்? எல்லாருக்குமே ‘அது’தான் உடனே தோணும்.

* சில நேரங்களில் ராக்கெட் டேக்-ஆஃப் ஆவதில்லையே?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
பழைய ஸ்கூட்டரை 15 டிகிரி சாய்த்து ‘கிக்’ செய்தால் ஸ்டார்ட் ஆகிவிடுமே? அதுமாதிரி ஏதாவது ட்ரை பண்ணிப் பார்க்கணும்.

*அறுபதிலும் ஆசை வருமா?
- பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம்.
அறுபதுக்கு இருபது மேல் வந்தால்தான் வில்லங்கம்.

* எங்கள் ஊர் பரோட்டா வறட்டி மாதிரி இருக்கிறது....
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.
மாஸ்டர் மீதுதான் தவறு. பதமாய் மாவு பிசைந்திருக்க வேண்டும்.

* எதுக்கும் ஒருமுறை ஒத்திகை பார்த்துக்கறது தப்பில்லையே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஒத்திகை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தாதான் தப்பு.