அவளுக்கென்ன அழகிய முகம்காதலை சேர்த்துவைக்கும் காதலில் தோற்றவர்கள்!

காதலில் தோல்வியடைந்த மூன்று பேர், தங்களுக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது என்று திட்டமிடுகிறார்கள். காதலில் தோல்வியடைந்த ஹீரோ பூவரசனை, மீண்டும் காதலியோடு சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள். முயற்சி வென்றதா என்பதே மீதிக்கதை.
ஹீரோ பூவரசன் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். ஹீரோயின் அனுபமா பிரகாஷ், பார்த்தவுடனே காதல் தீயைப் பற்றவைக்குமளவுக்கு அழகு. ஹீரோவின் நண்பர்களாக நடித்தவர்களும், அவர்களின் காதலிகளாக நடித்தவர்களும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

யோகி பாபு குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாகச் சிரிக்க வைக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசனும் தனது பங்கிற்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்.டேவிட் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன.

நவநீதனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, நான்கு காதல் கதைகளையும் வெவ்வேறு லைட்டிங்கில் காட்டியிருப்பது சிறப்பு.  எளிமையான கதை என்றாலும், அதை திரைக்கதையாக்கிய விதத்தில் காதலையும், காமெடியையும் சேர்த்து இளைஞர்களுக்கான ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் ஏ.கேசவன்.