சரியான அளவு!



சரோஜாதேவி பதில்கள்

*சரோஜாவுக்குப் பிடித்த பழமொழி?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இறைத்த கிணறு ஊறும்.

* இப்போது ஏன் பெண்கள் மூக்குத்தி அணிவதில்லை?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
அதுக்குப் பதிலாதான் மத்திய சுழியில் வளையம் அணிகிறார்களே, பார்த்ததில்லையா?

* அடைமழைக்குத் தோதான சைட் டிஷ்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
கோன் ஐஸ்.

* திருமணமான பெண்கள் பாவாடை சட்டை அணியலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
மாப்பிள்ளையின் சவுகரியத்தைப் பொறுத்தது.

* சரியான அளவு எது?
- சுவாமி சுப்ரமணியா, பெங்களூரு.
அளவும் அளவாக இருந்தாதான் அழகு.