மன்மத லேகியம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

பிட்டு படங்களைவிட செம ஹாட்டாக இருக்கிறதே ‘பெட்டிக்கடை’ படத்தின் பிட்டு படங்கள். படம் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு துட்டு சேர்த்திட ‘வண்ணத்திரை’ வாசகர்கள் வாழ்த்துகிறோம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘வண்ணத்திரை’ புளோஅப்புகளுக்கு நீங்கள் எழுதும் வாசகங்கள் வண்ணப்படத்தை கருத்துப்படமாக மாற்றுகிறது. சேவைக்கு வாழ்த்துகள்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

புதிய இசையமைப்பாளர் அருள்தேவின் வருகை, தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு திறமையாளரை பெற்றுத் தரும் என்று உறுதியாக நம்பலாம்.
- கவிஞர் நீலமலை ஜே.பி, உதகை-2.

அஸ்மிதாவின் முன்னட்டை மற்றும் பின்னட்டை படங்களைக் கண்டவுடன் மன்மத லேகியம் சாப்பிட்டது மாதிரி சும்மா கிண்ணென்று ஆகிவிட்டது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘பிலிமாயணம்’ பகுதியில் அந்தக்கால விளம்பரங்களை நினைவுறுத்தியதின் மூலம் எங்களையும் எண்பதுகளுக்கும் தொண்ணூறுகளுக்கும் கொண்டு சென்று விட்டார் பைம்பொழில் மீரான்.
- நாகேஷ், வேலூர்.

‘சார்லி சாப்ளின் - 2’ படத்தின் ஸ்டில்கள் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. பிரபுதேவாவின் செகண்ட் இன்னிங்ஸ் சிறப்பாக அமையும்.
- ரவீந்திரன், நாகை.

‘கொரில்லா’ இயக்குநர் டான் சாண்டியின் பேட்டியும் படத்தின் ஸ்டில்களும் சூப்பர். ‘கோ’ போல ‘கொரில்லா’வும் ஜீவாவுக்கு பெரிய வெற்றிப் படமாக அமையும்.
- சிவராஜன், திருத்துறைப்பூண்டி.