ஆடை தள்ளுபடி!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடுப்பக்க பிந்துவுக்கோ ஆடையில்லாத் திண்டாட்டம். அதைக் காணும் ரசிகர்களுக்கோ ‘வண்ணத்திரை’ கொண்டாட்டம்.
- எம்.சேவுகப்
பெருமாள், பெருமகளூர்.

ஐஸ்கிரீம் அழகி ஐஸ்வர்யா மேனனிடம் ‘நயன்தாராவுக்கு போட்டியா?’ என்றெல்லாம் ஏடாகூடமாகக் கேட்டு டார்ச்சர் செய்கிறீரே, நியாயமா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

41-ஆம் பக்க வண்ணப்படத்தில் தெறிச்சது பட்டன் மட்டுமில்லே;
எங்க மனசும்தான்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

டீச்சரை ஜூட்டு விடும் தியேட்டர் ஓனர் என்கிற ஒன்லைனருக்கு ‘கன்னி ராசி’ என்கிற டைட்டில் பச்சக்கென்று செட்டாகிறது.
- கே.முருகன், திருவண்ணாமலை.

துணிக்கடைகளில் ஆடி தள்ளுபடி வருவது வருடத்துக்கு ஒருமுறைதான். வருடம்  முழுக்கவே ‘வண்ணத்திரை’ எங்களுக்கு வழங்கும் ஆடை தள்ளுபடிக்கு நன்றியோ  நன்றி.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

சாதாரணமாகவே சாமியாடுவார். சாமி படம் எடுக்கிறார் என்றால் தலைவிரிச்சி ஆடுவார். ‘இது டபுள் சாமி’ என்று இயக்குநர் ஹரி கொடுக்கும் வாக்குறுதியை நம்பலாம்.
- ரவீந்திரன், மயிலாடுதுறை.

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் இயக்குநர் அஜயன்பாலா தன் வாழ்க்கை அத்தியாயங்களை எழுதிய பகுதி அருமை.
- பழனிச்சாமி, பொள்ளாச்சி.