ஜாலிடே!சரோஜாதேவி பதில்கள்

* விடுமுறை தினமென்றாலே மனசு ஸ்பெஷல் ஷோவுக்கு ஏங்குதே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
அப்படின்னா அது ஹாலிடே இல்லை. ஜாலிடே!

* சுதந்திரம் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
NO BRA DAY. இது என்ன நாளென்று இணையத்தில் தேடிப்பிடித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வதில் பெண்கள் கெட்டிக்காரர்களா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
அப்படியெல்லாம் இல்லை. ஆண்களுக்கு ‘வெளிப்படையாக’த் தெரிந்துவிடுகிறது, அவ்வளவுதான்.

* அம்மாதிரி விஷயத்துக்கு அது ஏன் ‘ரெட் லைட்’?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
Red light is elevating the mood என்கிறார்கள் உளவியலாளர்கள்.

* கொட்டை இல்லாத பழம் எது?
- வண்ணை கணேசன்,
பொன்னியம்மன்மேடு.
இதெல்லாம் ஒரு கேள்வியா? வாழைப்பழம்.