வயிற்றிலே புளி!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குநரின் அடுத்த படம் என்றதுமே ‘கஜினிகாந்த்’ படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் என்றுகூறி எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டீர்களே சார்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘எது சரியக்கூடாது?’ என்கிற வாசகரின் கேள்விக்கு சரோஜாதேவி கொடுத்த பதில் ஆன்மீக அனுபவம்.
- ராஜாராமன், சேலம்.

சின்னத்திரை அக்‌ஷரா ரெட்டி, வண்ணத்திரையிலும் சாதிப்பார். காஸ்டிங் கவுச் பிரச்சினை குறித்து அவர் கொடுத்த பதில் அபாரம்.
- குந்தவை, தஞ்சாவூர்.

‘கும்கி’யைப் போலவே ‘கும்கி-2’வும் இயக்குநர் பிரபுசாலமனின் புகழை பறைசாற்றும் படமாக அமையும்.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

ஹீரோக்களே தயாரிப்பில் இறங்கும் காலமிது. தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை நட்சத்திரங்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இது அமையும். அவ்வகையில் தயாரிப்பாளர் ஆகியிருக்கும் பாபிசிம்ஹா, இத்துறையில் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துகள்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அழகாய் இருக்கும் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா, தமிழ் சினிமாவில் பூத்த குறிஞ்சிப்பூ. அவரை நடிக்க வைத்து அவரது திறமையை சினிமாவுலகம் வீணடித்து விடக்கூடாது என்பதே நம் கவலை.
- யோகேஷ்வரன், நாகர்கோவில்.

நடிகர் ராஜ்கமலின் பள்ளிக்கூட அனுபவங்கள் சிறப்பு. நாமே நம்முடைய பள்ளிக்கூட நாட்களுக்கு மீண்டும் சென்றதைப் போன்ற கால இயந்திர அனுபவத்தைக் கொடுத்தது.
- வீரா, பெங்களூர்.