ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தயாராகும் ‘நகல்’!டிஜிட்டல் சினிமா வந்த பிறகு இளம் இயக்குநர்கள் வித்தியாசமான, புதுமையான கோணத்தில் படங்களை உருவாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகவுள்ளது ‘நகல்’. இதன் நாயகன் சிவசக்தி.

நாயகி ரிஷ்மா. S2S பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.கிருஷ்ணா மோகன் இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை சதுர்த்தி ஐயப்பன். இசை பைசல். பாடல்கள் அருண்பாரதி. ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்தன். சண்டை ஸ்டன்ட் சிவா.

‘‘நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தர மறந்ததில்லை. ரசிகர்கள் கொடுக்கும் ஊக்கத்தால்தான் பல புதிய முயற்சிகள் உருவாகிறது. இது சஸ்பென்ஸ் கலந்த கமர்ஷியல் கதை. சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பு ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கும்.

சில கதைகளில் பத்தாவது நிமிடத்திலேயே கதை எதை நோக்கி டிராவலாகிறது என்பதை யூகித்துவிட முடியும். ஆனால் இதில் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாகவும் ரசிகர்களால் யூகிக்க முடியாதளவுக்கும் வித்தியாசமாக இருக்கும்’’ என்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.கிருஷ்ணா.

- ரா