குஜால் டைரக்டருக்கு பச்சை தயாரிப்பாளர் பரிசளித்த சொகுசு கார்!



வாட்ஸப் சாமியாரின் சுலோகத்தைத் தலைப்பாக வைத்து முதல் படத்தை இயக்கினார் சந்தோஷ இயக்குநர். படத்தை பச்சை நிறுவனம் வெளியிட பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. இதையடுத்து இயக்குநரின் அடுத்த படத்துக்கு பச்சை நிறுவனமே அட்வான்ஸ் கொடுத்துவிட்டது.

‘டார்க் ரூமில் டஃப் பஞ்ச்’ என்கிற வில்லங்கமான டைட்டிலில் வெளியாகி இருக்கும் அந்தப் படமும், ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு கணிசமான லாபத்தை கண் முன்னே காட்டியிருக்கிறது. பிரதியுபகாரமாக இயக்குநருக்கு சொகுசு கார் ஒன்றை வாங்கிப் பரிசளித்திருக்கிறாராம். ‘அடுத்த படமும் அண்ணனுக்கே இதுமாதிரி குஜாலா பண்ணிக் கொடுக்கணும்’ என்று இயக்குநரிடம் கேட்டுக் கொண்டாராம் தயாரிப்பாளர்.

- மியாவ்