காதலரை ஹீரோவாக்க நயன்தாரா முயற்சி!



இயக்குநர் விக்னேஷ்சிவனுடனான தன்னுடைய காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தா விட்டாலும், ஒருவகையில் எப்படியோ அழுத்தமாக ரெஜிஸ்டர் செய்துவிட்டார் நயன்தாரா. தன்னுடைய நடிப்பு கேரியரை ஸ்மூத்தாக முடித்துக் கொண்டு காதலரைக் கைப்பிடிக்க தயாராகி வருகிறார்.

எனவேதான் வழக்கமாக ஹீரோவோடு ஃபாரினில் டூயட் பாடுவது, கிளைமேக்ஸ் பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது போன்ற வேடங்களை துறந்துவிட்டு ஹீரோயின் ஓரியண்டட் படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். திருமணத்துக்குப் பிறகு ஜோதிகாவைப் போல செலக்டட்டாக நடிக்கத் திட்டமாம்.

திருமணத்துக்கு முன்பாகவே தன் காதலரை ஹீரோவாக திரையில் பார்க்க ஆசைப்படுகிறார். நயன்தாராவிடம் கதை சொல்ல வருகிறவர்களிடம் விக்னேஷுக்காகவும் ஒன்லைனர் கேட்கிறார் என்கிறார்கள்.

இதுவரை விக்னேஷை ஹீரோவாக அறிமுகப்படுத்த வெயிட்டான கதை எதுவும் சிக்கவில்லையாம். வெறெந்த தயாரிப்பாளருக்கும் சங்கடம் தராமல், இந்த ரிஸ்க்கையும் தன்னுடைய சொந்த செலவிலேயே எடுப்பதற்கு நயன்தாரா தயாராக இருக்கிறாராம்.பேசாமல், விக்னேஷிடமே அவர் நடிப்பதற்குரிய கதையை நயன் கேட்கலாம்.

- யுவா