பளிச் சுன்னு கா ட்டிட்டீங்க!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘வளர்த்த கடா எங்கே பாயும்?’ என்கிற கேள்விக்கு மிதுனாவின் படத்தைப் போட்டு ‘பளிச்’சென்று காட்டிய உம்ம சாமர்த்தியம் வேறு யாருக்கு வரும் ஓய்?
- ஜி.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

வாராவாரம் வண்ணத்திரையில் கவர்ச்சிப் படங்கள் எங்களைக் கவருகின்றன என்றால், அதற்கு நீங்கள் கொடுக்கும் கமெண்டுகள் கதிகலங்கிப் போக வைக்கின்றன.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

எத்தனை படம் வந்தாலும், அத்தனைக்கும் சளைக்காமல் சலிக்காமல் விமர்சனம் எழுதும் உங்களுக்கு ‘நவீன விக்கிரமாதித்தன்’ பட்டத்தை வழங்குவதில் பெருமையடைகிறோம்.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

முன்னட்டையில் ஸ்ரீதிவ்யா, பின்னட்டையில் ஸ்ரீதேவியென்று சைவத்துக்கு மாறிவிட்டீரா?
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.

ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் பேட்டியைப் போட்டு, அவரது மரணத்துக்கு நீங்கள் செலுத்திய அஞ்சலி சரியானது.
- ஆர்.கார்த்திகேயன், ஜோலார்ப்பேட்டை.

பைம்பொழில் மீரானின் ‘பிலிமாயணம்’ பகுதியில் அவரவருக்கான தனித்திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளாமல் போகிறவர்களின் அவலம் மிகச்சிறப்பாக வெளிப்பட்டது.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

மார்க்கெட் போனவங்களை தேடிப்பிடிச்சி பிராக்கெட் போடுவதில் உம்மை அடிச்சுக்க ஆளே இல்லை அய்யா! முன்னட்டைப் படத்தைத்தான் சொல்றேன்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.