No adjustment.. So, No chance!



உச்ச நடிகரோடு நடிக்கும் நடிகையுடன் ஜோடி போட அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்கள் போட்டி போடுவது வாடிக்கை. ஆனால், அந்த வெளிநாட்டு நடிகைக்கு மட்டும் சொல்லிக்கொள்ளும்படி வேறெந்த வாய்ப்புகளும் வரவில்லை.

வெளிநாட்டு டிவி சீரியல், வெப்சீரிஸ் என்று நடித்து சமாளித்துக் கொண்டிருக்கிறாராம். “அந்தப் பொண்ணு சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேங்குது. அதனாலேதான் நம்ம ஹீரோக்களுக்கு புடிக்கறதில்லை” என்று சொல்லி சிரிக்கிறார் ஊரிலிருந்து பணத்தோடு படமெடுக்க வந்திருக்கும் புதுத்தயாரிப்பாளர் ஒருவர்.

- மைக்கேல் ஜாக்சன்