பள்ளத்துலே விழுந்துட்டோம்!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘வெண்ணிற ஆடை மூர்த்தி’யின் பேட்டி ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்கிற பழமொழியை வலுப்படுத்துவதாக அமைந்தது. கிரேட் மேன்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

உதயநிதியின் நடிப்பு கேரியரை ‘நிமிர்’த்துகிற படமாக பிரியதர்ஷனின் படைப்பு இருக்கும் என்கிற
நம்பிக்கை ஏற்படுகிறது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘அருவி’ அதிதி பாலனின் பேட்டி சிறப்பு. வக்கீலுக்கு படித்து, திரைத்துறைக்கு வந்திருக்கும் இவர், நடிப்பில் வித்தியாசம் காட்டி தேசிய விருதுகளை அள்ளுவார் என்கிற எதிர்பார்ப்போடு வரவேற்போம்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

பத்தொன்பதாம் பக்கத்தில் ‘பள்ளத்துலே விழுந்துடாதீங்க’ என்று நீங்கள் எச்சரிக்கைப் பலகை வைத்திருந்ததைக் கவனிக்காமல் காம்னாவின் அந்த மத்தியப் பிரதேச பெரும் பள்ளத்தில் விழுந்துவிட்டோம். யாராவது தூக்கி விடுங்களேன்.
- ராம்குமார், சென்னை-91.

‘முத்தம் மட்டுமே உதடுகளின் பயன் என்று கருதுபவர்கள் முட்டாள்கள்’ என்கிற சரோஜாதேவியின் தத்துவார்த்தமான பதிலை வாசித்துவிட்டு இரவு முழுக்க தூங்காமல், இந்தக் கருத்தின் தாத்பரியங்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
- வ.சங்கர், திண்டுக்கல்.

நண்பர்கள் குறித்த இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணாவின் ‘டைட்டில்ஸ் டாக்’ நினைவலைகள் சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தன.
- குந்தவை, தஞ்சாவூர்.

எங்க மாவட்டத்துக்காரரான பைம்பொழில் மீரான் எழுதும் ‘பிலிமாயணம்’ திரை ரசனையின் பரவசங்களை அள்ளி அள்ளித் தருகிறது.
- எம்.முருகன், சுரண்டை.