காந்தலே ருசி!சரோஜாதேவி பதில்கள்

* கருப்பான பெண்கள்தான் எனக்கு அழகாகத் தெரிகிறார்கள்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
காந்தலே ருசி என்கிற சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் உங்களுக்கு பாராட்டுகள்!

* சொர்க்கத்தின் கதவை எப்படித் திறப்பது?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பூட்டு, பெண்ணிடம். சாவி, ஆணிடம். திறப்பது அவரவர் சாமர்த்தியம்.

* பெண்களின் மனசு ஆழமென்கிறார்களே...?
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.
இல்லாவிட்டால் ஆண்கள் ஈஸியாக தூர் வாரிவிடுவீர்களே?

* காதல் போரில் வெற்றி யாருக்கு?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
மோதிக்கொள்கிறவர்கள் இருவருக்குமே இறுதியில் வெற்றிதான்.

* மனசு அலைபாயும் வயசு எது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
அலையடிக்க கரை இருந்தால் போதும். எந்த வயசிலும் பாயலாம்.