சாவி



பழியில் சிக்கும் அப்பாவி!

நடைபாதையில் சாவி விற்கும் கடை வைத்திருக்கிறார் பிரகாஷ் சந்திரா. அவருக்கும் ஜவுளிக்கடையில் வேலைபார்க்கும் சுனுலட்சுமிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில் ஒரு வீட்டில் நடக்கும் கொள்ளைக்கு சாவி கொடுத்து உதவியதாக பிரகாஷ் சந்திரா மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவரது அண்ணனும் கொலை செய்யப்படுகிறார். தலைமறைவான பிரகாஷ் சந்திரா உண்மைக்குற்றவாளிகளைத் தேடுகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பது கதை.

அப்பாவியாக பிரகாஷ் சந்திரா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். துரோகம் செய்த நண்பனிடம் பேசும் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சுனு லட்சுமி  இயல்பான நடிப்பால் இதயத்தில் இடம் பிடிக்கிறார். கவிஞர் நந்தலாலா நேர்மையான காவலராக வந்து இறுதியில் வில்லனாக மாறுவது எதிர்பாராத திருப்பம். ராஜ லிங்கம், உதயபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

அளவான பாடல்கள். அவற்றை இதமாக இசைத்திருக்கிறார் சதீஷ் தாயன்பன். சேகர் ராமின் ஒளிப்பதிவில்  மதுரையின் அழகு மணம் வீசுகிறது.எளிமையான கதைக்கு வலிமையான திரைக்கதை அமைத்து, பொருத்தமான கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நல்ல த்ரில்லர்  படத்தை இயக்கியிருக்கிறார் ஆர்.சுப்ரமணியன்.