காந்த படங்கள்!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
‘வேலுநாச்சியார்’ படத்தை வைகோ தயாரிப்பது வரவேற்கத்தக்கது. வெகு பொருத்தமானதும்கூட. கைதட்டி வரவேற்போம். - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
யப்பா... நடுப்பக்கத்து சூடான என்ஜினைப் பார்த்து எங்க மனசெல்லாம் புகைஞ்சு போச்சுங்க. இதே மாதிரி ‘ஏ’காந்த படங்களைத்தான் தொடர்ச்சியாக நாங்க எதிர்பார்க்கிறோம். - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பக்கத்துக்குப் பக்கம் ‘மடிப்புகளும் வளைவுகளுமாக’ எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டீர்கள். கவர்ச்சிகரமான பத்திரிகையில், பைம்பொழில் மீரான் அவர்களின் ‘பிலிமாயணம்’ தொடர், கருத்துக்கும் விருந்து வைப்பது சிறப்பானது. - கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
‘ஹரஹர மகாதேவகி’ படத்துக்கு சரோஜா கொடுத்த ஒரு வரி விமர்சனம் டாப் டக்கர், நைனா. - எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.
தமிழ் சினிமா கனவு நாயகிகளின் கட்டான உடல் ரகசியத்தை பதினோரு பக்க கட்டுரையாக மை.பாரதிராஜா, ‘கட்டோடும் குழலோடும்’ விவரித்த அழகு நேர்த்தி. - ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.
‘சர்வர் சுந்தரம்’ படத்தின் முன்னோட்டம் மிகவும் சிறப்பு. - ஆர்.கார்த்திகேயன், சென்னை-102.
‘ரஜினிக்குப் பிடிச்ச படம் தமிழுக்கு வருது’ என்கிற உங்கள் அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எல்லாத் தரப்பு சினிமா ரசிகர்களுக்குமே இனிப்பு. - குந்தவை, தஞ்சாவூர்.
|