வாட்ஸப்பில் ஜல்லிக்கட்டு!



இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் முழுவதுமே ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்தது அல்லவா? அதையே ‘வாட்ஸ் அப்’ என்கிற பெயரில் படமாக்குகிறார் ஏ.ஆர்.ரஷீத்.ஒரு தனியார் அமைப்பால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுகிறது.

இதைக் கண்டு ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான அலங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கொதித்து எழுகிறார்கள்.

போராட்டக் களத்தை தங்களது கிராமத்திலிருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு மாற்றுகிறார்கள். இதுதான் படத்தின் கதை.படத்தின் ஹீரோவாக எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் அறிமுகமாகிறார்.

இவர் ஜானகி அம்மாளின் தங்கை மகளான சுதா விஜயகுமாரின் மகன். எம்.ஜி.ஆரின் பெயரான ராமச்சந்திரன் என்பதை இவருக்குச் சூட்டியவரும் எம்.ஜி.ஆர் தானாம். இவருடன் ஹீரோயினாக பெங்களூர் வரவு தீப்தி நடிக்கிறார்.

- லக்கி