வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
சரோஜாதேவி பதில்கள்
*நயாகரா - வயாகரா; ஒப்பிடவும். - த.சத்தியநாராயணன், அயன்புரம். முந்தையது அருவி, பிந்தையது கருவி.
*முதலிரவில் யார் முதலில் பேசவேண்டும்? - ப.முரளி, சேலம். அதென்ன பேச்சுப் போட்டியா? இங்கே செயல்பாடுதான் சார் முக்கியம்.
*தொட்டில் பழக்கத்தை மாற்றவே முடியாதா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. கணேசன், இன்னமுமா விரல் சப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?
*இனிப்புக்கடை விளம்பரங்களில் பெரும்பாலும் பெண்களே நடிப்பது ஏன்? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். பெண்ணின் அங்கங்களை இனிப்புப் பண்டங்களோடு ஒப்பிட்டு கவிதை எழுதும் நம்ம கவிஞர்களைத்தான் கேட்கணும்.
*காதலையும் கற்று மறக்கலாமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) காதலைக்கூட மறந்துவிட முடிகிறது. அதன் உபவிளைவான காமத்தை மறக்க முடியவில்லை என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.
*காதலியின் தோழியும், மனைவியின் தங்கையும் அழகாய் தெரிவதின் ரகசியம் என்ன? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. எட்டாக்கனி கண்டிப்பாக இனிக்குமென்ற நம்பிக்கைதான்.
*கிரிக்கெட் பற்றி என்ன கருதுகிறீர்கள்? - ஆர்.கார்த்திகேயன், சென்னை-102. பேட், பால், ஸ்டம்ப் எல்லாம் வைத்து விளையாடும் விளையாட்டு என்று கருதுகிறேன்.
* உதட்டில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டமா? - பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம். உங்களுடைய அதிகபட்ச முயற்சி உதடுதானா? இன்னும் கொஞ்சம் டீப்பா யோசிச்சி கேள்வி கேளுங்க அண்ணே.
*‘ஒண்ணும் தெரியாத பாப்பா, ஒன்பது மணிக்கு போட்டுக்கிச்சாம் தாப்பா’ என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் சரோ? - செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம். வாயிலே விரலை வெச்சாகூட கடிக்கத் தெரியாத பாப்பா பாரு. பழமொழிக்கு அர்த்தம் தெரியாம நம்மளை கேள்வி கேட்குறாராம்.
*வாயுள்ள உள்ள பிள்ளை பிழைக்கும் என்கிறார்களே.. எப்படி? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. ச்சீய்... ஒரு வயசுப் பொண்ணு கிட்டே இப்படியெல்லாமா டபுள்மீனிங்கில் கேள்வி கேட்பீங்க?
|