காகித கப்பல்



கவிழாத கப்பல்!

பேப்பர் பொ றுக்கி வாழ்க்கையில் முன்னேறும் ஹீரோ. ஒரு நெருக்கடியான சூழலில் ஹீரோயினை சந்திக்கிறார். இவரது நேர்மையின் காரணமாக காதல் மலர்ந்து கல்யாணம் நடக்கிறது.

படம் தயாரிக்க ஹீரோவை அணுகுகிறார் ஓர் இயக்குநர். ஹீரோவோ, தானே ஹீரோவாக நடித்து, தன் மனைவியை ஹீரோயினாக போடுகிறார். படத்துக்குள் தயாரிக்கப்படும் இந்தப் படம் வெளிவந்ததா என்பதே கதை.

ஹீரோயினின் அப்பா ஜெயிலுக்குப் போவது, அப்புக்குட்டியை கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரிப்பதெல்லாம் கதைக்கு எதற்கு என்பதே தெரியவில்லை. தேசிய விருது பெற்ற நடிகரான அப்புக்குட்டி முழுநீள மசாலா ஹீரோவாவதற்கு வேறு கதையை பரிசீலித்திருக்கலாம். யதார்த்தமான கதைதான் என்றாலும், எடுத்த விதத்தில் கொஞ்சம் சோதித்திருக்கிறார் இயக்குநர் சிவராமன்.

ஹீரோயின் தில்லிஜா, துட்டுக்கேத்த ரொட்டி. பிரசன்னாவின் இசையில் ‘தல’ பாட்டுக்கு மட்டும் தியேட்டர் அதிர்கிறது. பின்னணி இசைக்கு மெனக்கெட்டிருக்கலாம். வெங்கட்டின் ஒளிப்பதிவும் ஓக்கே ரகம்தான்.காகிதக் கப்பலாக இருந் தாலும் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிடவில்லை.