மீண்டும் கோடைமழை!



எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொள்வதால், சிறிய படங்களுக்கு மூச்சுவிடக் கூட இடமில்லை. சர்வதேச விழாக்களில் விருது பெற்ற தரமான சிறிய பட்ஜெட் படங்களைக் கூட வெளியிட முடியாமல் தவிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘கதிரவனின் கோடைமழை’. பரவலான பாராட்டுகளைப் பெற்றும்கூட போதுமான அரங்குகள் கிடைக்காததால், மக்கள் நிறைய பேர் இப்படத்தை பார்க்க முடியவில்லை.

இப்படத்தை சமீபத்தில் பார்த்த ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ், “அருமையான இந்தப் படத்தை மக்களிடம் நானே கொண்டு சேர்க்கிறேன்” என்று சொல்லி, மீண்டும் ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்.இயக்குநர் கதிரவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தனுஷின் சித்தப்பா மகனான கண்ணன் ஹீரோவாகவும், ஜா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.

- சுரா