உதவி இயக்குநர்களுக்கு தீபாவளி பிரியாணி!



‘வீர சிவாஜி’, ‘கத்தி சண்டை’  படங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் எடுக்கும் படத்தை ‘நடுவுல  கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் கேமராமேன் பிரேம்குமார் இயக்குகிறார்.  இதில் ஹீரோ விஜய் சேதுபதி.* மிஷ்கின் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து நடிக்கிறார் விஷால். இதில் ஹீரோயின் அக்‌ஷரா கமல்.

* சொகுசு காரெல்லாம் வைத்திருந்தாலும், இன்னமும் புல்லட்டில்தான் பயணிக்கிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.

*  சென்னை கே.கே.நகரில் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான் ‘கவிஞர் கிச்சன்’ என்றொரு உணவகம் நடத்துகிறார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களில் உதவி இயக்குநர்களுக்கு இலவசமாக பிரியாணி விருந்து கொடுப்பதை கவிஞர் வழக்கமாக வைத்திருக்கிறாராம்.

* ‘ரெமோ’வின் பிரும்மாண்ட ஹிட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து பிரும்மாண்டங்களை எடுக்க திட்டமிட்டிருக்கும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்.

- எஸ்ரா