உலகசாதனை படத்தில் திமுக வேட்பாளர்!



பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி உலக சாதனை படைத்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.செல்வா. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. படத்தின் பெயர் ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’. ஹாரர் காமெடி படமாம்.

இரண்டு மாத ஒத்திகைக்குப் பிறகே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இதற்கு முன்பாக தமிழில் 24 மணி நேரத்தில் ‘சுயம்வரம்’ என்று படம் எடுத்து சாதனை செய்திருக்கிறார்கள்.படத்தில் ஹீரோவாக நடிப்பவர் டாக்டர் சரவணன்.

மதுரை ஏரியாவில் இவரது மருத்துவமனை மிகவும் பிரபலம். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த அன்றுதான், நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

- யுகி