நான் செக்ஸ் சிம்பல்தான்!வாட்ஸ் யுவர் பிராப்ளம்?



மனம் திறக்கிறார் சன்னி லியோன்

சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த பேஷன் வீக் நிகழ்ச்சியின் மேடையில், ஆரவாரமான கைத்தட்டல் ஒலிகளுக்கு மத்தியில் ஒய்யாரமாக நடந்து வந்தார் சன்னி லியோன். இந்த மேடையில் நடக்கும் முதல் இந்திய நடிகை இவர்தான்.

செக்கச் சிவந்த நிறம் கொண்ட அவரின் முகம் பூரிப்பால் மேலும் சிவந்தது. மேடையிலிருந்து இறங்கும்போது விழியோரம் கண்ணீர். யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டார். யூ-ட்யூபில் இந்தக் காட்சியை கேட்ச் செய்துவிட்ட நாம், சாட்டிங்கில் அவரைப் பிடித்தோம்.

“தமிழர்கள் என்றால் மட்டும் உங்களுக்கு இளக்காரமா? ‘வடகறி’ படத்தில் ஸ்பெஷலாக உங்கள் பெயரைப் போட்டு பாட்டெல்லாம் எழுதி ஆடவைத்தோமே? அதற்குப் பின் ஏன் பாராமுகம்?”

“அய்யய்யோ. இது அபாண்டம். ஐ லவ் தமிழ்ஸ். 2017 இறுதிவரை இந்தியில் ரொம்ப பிஸி. ஷாருக் படமெல்லாம் இருக்கு. தமிழில் மட்டுமல்ல. தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் என்னை விரும்பி அழைக்கிறார்கள். தமிழில் ‘வடகறி’ செய்தமாதிரி, அங்கெல்லாம் கூட பெயருக்கு ஒரு படத்தில் முகத்தை காட்டிவிட்டேன்.

முன்பு என்னை ‘எரோடிக்’ ஆன ரோல்கள் செய்யத்தான் அழைப்பார்கள். அல்லது ஒரு ஐட்டம் சாங்குக்கு ஆடச் சொல்வார்கள். இப்போது எனக்காகவே பாலிவுட்டில் கதைகள் எழுதுகிறார்கள்.

‘எரோடிக் ஆக்‌ஷன்’ என்று புதுவகை ஜானரையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சின்ன கேப் கிடைச்சாலும் மெட்ராஸ் பக்கம் வந்துடுவேன். சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு ஐம்பது ரசிகர்களாவது எனக்கு மெயில் செய்கிறார்கள். அவர்கள் அன்புக்கு ஏதாவது கைமாறு செய்தே ஆகணும்.”

“நியூயார்க் பேஷன் ஷோ மேடையில் இருந்து இறங்கியபோது உங்கள் கண்களில் கண்ணீரைப் பார்த்தோம்...”“பார்த்துட்டீங்களா? ஆக்சுவலாக வாய்விட்டு அழுதிருப்பேன். சன்னியின் இமேஜ் போய்விடக்கூடாதே என்று கஷ்டப்பட்டு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மேடையில் நான் தோன்றக்கூடாது என்று என்னை நிராகரித்தார்கள். அப்போது நான் இந்தியர்களுக்கு பிடித்த மாதிரியாக கொழுக் மொழுக்கென்று இருந்தேன். ‘குண்டச்சிக்கு பேஷன் ஷோ கேட்குதா?’ என்று அமெரிக்கர்கள் கிண்டலடித்தார்கள். மாடலிங் உலகில் இருந்தே என்னை விரட்டியடிக்க முயற்சித்தார்கள்.”

“அதற்குப் பிறகுதான்....?”

“ஆமாம். ‘போர்னோகிராபி’ படங்களில் நடிக்கவும், இயக்கவும் அதுதான் காரணம். நியூயார்க்கை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் நடந்த பேஷன் ஷோக்களிலும் நான் நிராகரிக்கப்பட்டேன்.

என்னை எல்லோருமே ‘அந்த’ கண்ணோட்டத்தோடுதான் பார்த்தார்கள். என்னுடைய மாடலிங் மற்றும் நடிப்புத் திறமையை யாருமே அங்கீகரிக்கவில்லை. பல முறை பலரால் ஏமாற்றப்பட்டேன். புரியுமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட பிழைப்புக்கு ‘அந்த’ மாதிரி படங்களிலேயே நடித்துவிடலாமே என்று மனதை கல்லாக்கிக் கொண்டுதான் முடிவெடுத்தேன்.”

“உங்களை திமிர் பிடித்தவள் என்கிறார்களே?”

“திமிர் பிடித்தவளாக நடிக்கிறேன் என்பதுதான் உண்மை. ‘அந்த’ மாதிரி வீடியோ படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, என்னை மாட்டை விட கேவலமாக நடத்தினார்கள். ‘ஏய், அப்படி தள்ளிப் போய் நில்லு’ என்று சாதாரண டெக்னீஷியன்கள் கூட விரட்டுவார்கள். ஆரம்பக் கட்டத்தில் என் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை.

நிறைய பேர் ஓசியில் என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தாலும், யாருமே எதிர்பாராமல் ‘அந்த’ மாதிரி படங்களில் நான் ஒரு ஸ்டாராக நிலைபெற ஆரம்பித்து விட்டேன். இப்போது என்னுடைய முறை. பழிக்குப் பழி என்பது மாதிரியாக கொஞ்சம் பந்தா காட்டத் தொடங்கினேன்.

வேண்டுமென்றே ஏகப்பட்ட கண்டிஷன் போடுவேன். உணவில் தொடங்கி உடை, தங்கும் இடம், சம்பளம் உள்ளிட்ட விஷயங்களில் மிகக்கடுமையாக நடந்துகொள்வேன். இது நான் பட்ட வலிக்கு நிவாரணமாக அமைந்த பொய் வேஷம். எனக்கு நானே போட்டுக்கொண்ட முகமூடி. உண்மையில் நான் மலரினும் மெல்லியவள். என்னை நெருக்கமாக அறிந்தவர்கள் அனைவருக்கும் இது தெரியும்.”

“உங்கள் கணவர் டேனியல்?”

“அவரும் என்னுடன் ‘அந்த’ மாதிரி படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்தான். என்னாயிற்றோ தெரியவில்லை. எதைக்கண்டு அசந்தாரோ தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் ‘ஐ லவ் யூ’ சொன்னார்.

என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில், முந்தைய அனுபவங்கள் அப்படி. காரியம் ஆகவேண்டுமானால் காதலை கையிலெடுத்துக் கொள்வது ஆண்களின் இயல்பு. டேனியலைப் பொறுத்தவரை அப்படியில்லை என்று அவரோடு ஆறுமாத டேட்டிங் வாழ்க்கையில் உணர்ந்துகொண்டேன். அதன்பிறகே திருமணம் செய்துகொண்டோம்.”

“திருமணத்துக்குப் பிறகும் ‘அப்படி இப்படி’ நடிக்கிறீர்களே?”

“இந்தியக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் உங்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். டேனியலுக்கே இது பிரச்னையில்லை எனும்போது மற்றவர்கள் ஏன் என்னுடைய கவர்ச்சி திரையில் வெளிப்படுவதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் நடிகை. நடிப்பு என்னுடைய தொழில். என் உடல்வாகுக்கு கிளாமரான பாத்திரங்கள்தான் எடுபடும். அதைத்தான் நான் செய்கிறேன்.”

“இந்தியாவிலேயே செட்டில் ஆகக்கூடிய காலம் வருமென்று முன்பு நினைத்தீர்களா?”

“இல்லை. மாடலிங்கில் சாதிப்பதுதான் என்னுடைய ஆரம்பகால இலட்சியமாக இருந்தது. அது பிரச்னை ஆனபோது ‘அந்த’ மாதிரி படங்களில் நடித்து ‘போர்ன் ஸ்டார்’ ஆனேன். நூற்றுக்கும் மேற்பட்ட போர்ன் படங்களில் பங்கெடுத்தபிறகு, அந்த வாய்ப்பு எனக்கு மங்கத் தொடங்கியது. எத்தனை முறைதான் ரசிகர்களும் பார்த்ததையே திரும்பத் திரும்பப் பார்ப்பார்கள்? அப்போது திடீரென்று பாலிவுட் டைரக்டர் பூஜாபட் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அவரது அழைப்பின் பேரில் மும்பைக்கு வந்தபோது என்னை தேவாதி தேவர்கள் ஆசீர்வதித்திருக்க வேண்டும். 2012ல் ‘ஜிஸ்ம்-2’ படத்தில் ஆரம்பித்த ஓட்டம், அடுத்த ஆண்டு இறுதியைத் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கிறது. என்னைப் பார்க்கவே தியேட்டருக்கு ரசிகர்கள் வருகிறார்கள் என்றெல்லாம் கேள்விப்படும்போது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்ற மொழி திரைப்படங்களிலும் ஒரு பாடலுக்காவது ஆடுங்களேன் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தியா எனக்கு கொடுத்திருப்பது இரண்டாம் ஜென்மம். இப்போது மும்பையிலே செட்டில் ஆகிவிட்டேன். டேனியல் மட்டும் லண்டனில் வேலை விஷயமாக இருக்கிறார். லீவ் கிடைத்தால் என்னைப் பார்க்க ஓடோடி வந்துவிடுவார். எனக்கும் ஷூட்டிங் இல்லையென்றால் லண்டனுக்கு ஓடிவிடுவேன். இந்தியாவில் நான் பாதுகாப்பாக தாயின் கருவறையில் இருப்பதைப் போல உணர்கிறேன்.”

“இருந்தாலும் இங்கேயும் நீங்கள் செக்ஸ் சிம்பலாகத்தானே பார்க்கப்படுகிறீர்கள்?”

“அதனால் என்ன? நான் அழகாக இருக்கிறேன். என் உடல், ஆண்களைக் கவர்ந்து இழுக்கிறது. எல்லோரும் என்னைப் போல கிளாமர் ஸ்டார் ஆகமுடியுமா? ஹாலிவுட்டில் எல்லாம் செக்ஸ் காமெடி படங்கள் சக்கைப்போடு போடும்.

பிரபலமான நடிகைகள் அவற்றில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த டிரெண்ட், இப்போது பாலிவுட்டில் என்னால் உருவாக ஆரம்பித்திருக்கிறது. பிரபல ஹீரோயின்களே இப்போது இதுபோல நடிக்க ஆசைப்படுகிறார்கள். டிரெண்ட் செட்டராக இருப்பது எனக்கு பெருமைதான்!”