காஷ்மோரா பாகுபலிக்கும் மேலே!




* குறைந்த பட்ஜெட் படமான ‘ஜோக்கர்’ எடுத்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘காஷ்மோரா’வை தயாரித்திருக்கிறார்.

* இயக்குநர் கோகுல் இதற்கு முன்பாக ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ இரு படங்களையும் இயக்கியவர்.

* இந்தப் படத்தில் கார்த்திக்கு மூன்று கெட்டப்புகள். அவற்றில் ‘காஷ்மோரா’, ‘ராஜ்நாயக்’ இரண்டு பாத்திரங்களின் கெட்டப்பும் மிரட்டுமாம். சில காட்சிகளில் இவருக்கு மேக்கப் போடவே ஐந்து மணி நேரமாகுமாம்.

* நயன்தாராவுக்கு சரித்திர வேடம். ‘ரத்தின மகாதேவி’ என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுக்கு வழக்கமான கல்லூரி மாணவி வேடம். இரண்டு ஹீரோயின் என்றாலும், படத்தில் காதலே இல்லையாம்.

* ஹீரோவுக்கு ஃப்ரெண்டாகவே இருபது ஆண்டுகளாக நடித்து கொண்டிருக்கும் விவேக், இதில் கார்த்தியின் அப்பாவாக நடிக்கிறார்.

* ஜியோ டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் இப்படத்தின் கதை பில்லி, சூனியம் உண்மையா என்பதை ஆராய்கிறது. உலகம் தோன்றியதிலிருந்தே உருவாகியிருக்கும் பிளாக் மேஜிக் என்கிற மந்திர தந்திர கலையை, தற்போதைய டெக்னாலஜியில் மிரட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

* இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு காட்சியை 360 டிகிரியிலும் படம் பிடிக்கும் ஆம்னி டைரக்‌ஷனல் கேமரா டெக்னாலஜியை பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.

* பிரும்மாண்டமான அரசர் காலத்து அரண்மனைகள், உடைகள், பொருட்களை உருவாக்க எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்களில் வேலை செய்த சீனியர் டெக்னீஷியன்கள் உள்ளிட்ட இருநூறு தொழிலாளர்கள் இரவும் பகலுமாக பல மாதங்கள் கண்விழித்து வேலை பார்த்திருக்கிறார்கள்.

* அரை மணி நேரம்தான் சரித்திரக் காட்சிகள் வருகின்றன என்றாலும், அதற்கு ‘பாகுபலி’ படத்துக்கான உழைப்பை கொட்டியிருக்கிறோம் என்கிறார் ஹீரோ கார்த்தி.

* படத்தில் ஒன்றரை மணி நேரத்துக்கு கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறும் வண்ணம், விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஹாலிவுட் தரத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.

சுரேஷ்ராஜா