இலியானாவின் கடைசிப்படம்?



பாலிவுட் படங்களை ஓரங்கட்டும், ‘கபாலி’ பட ஓபனிங்கை கண்டு மிரண்டுவிட்டேன் என தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் கூறியிருக்கிறார்.தெலுங்கில் மகேஷ்பாபுவோடு இணையும் வாய்ப்பை இழந்தது வருத்தம்தான் என ஓவராக கவலைப்பட்டு வருகிறார் பரிணீதி சோப்ரா.

‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்துக்குப் பிறகு சல்மான் கான், டைரக்டர் கபீர் கான் இணையும் ‘ட்யூப் லைட்’ படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டது.

‘ரஸ்தூம்’ படத்தில் அக்‌ஷய்குமார் ஜோடியாக நடித்திருக்கிறார் இலியானா. இதுவே அவரது கடைசி படம் என பேச்சு அடிபடுகிறது.குழந்தைகளுக்கான படம் இயக்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் தபு. இந்த படத்துக்கு குல்ஸார் கதை எழுதுகிறார்.

- ஜியா