மத்தியப் பிரதேசத்தில் மர்மம் இல்லை!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

கபாலி ஸ்பெஷல், கலக்கல் ஸ்பெஷல். கபாலி வெளியான அன்றே படத்தின் வசூல் வெற்றிக்கும் கட்டியம் கூறியது ‘வண்ணத்திரை’.
- பாட்ஷா & ஹமீது, ஆனைக்குளம்.

கபாலியின் கம்பீர ரகசியம் என்னவென்று வெளிப்படுத்தியதற்கு நன்றி. நானும் கபாலி பாணி உடைக்கு மாறிவிட்டேன்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

மத்தியப் பிரதேசத்தில் மர்மம் எதுவுமில்லையென்று பப்பரப்பா என்று வெளிப்படுத்தும் தமன்னா மற்றும் காம்னாவின் ஸ்டில்கள், ‘சபாஷ், சரியான போட்டி!’ என்று கைதட்டி பாராட்டத் தோன்றியது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சினிமாவுக்கு கதை எழுத கற்றுக் கொடுப்பவர் மாணவன் அல்ல, பேராசிரியர்.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

‘காளை காளை முரட்டுக்காளை’ என்று ‘மனிதன்’ படத்துக்காக முரட்டுக்காளை மாதிரி துள்ளியாடி குதியாட்டம் போட்ட ரூபிணியின் இன்றைய படத்தை ‘அன்று இன்று’ பகுதியில் கண்டேன். காலம்தான் மனிதனின் வில்லன்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

கவர்ச்சி நடிகையாக மட்டுமே நம் நினைவில் தேங்கிப் போயிருக்கும் டிஸ்கோ சாந்தி, தான் சம்பாதித்த பணத்தை ஏழை எளியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல் என்பதை ‘ஹீரோயினிஸம்’ பகுதியில் வாசித்து நெகிழ்ந்தேன்.
- பொ.சின்னராஜா, குற்றாலம்.

வண்ணத்திரையே.. எங்கள் நெஞ்சத்திரையில் ஒளிவீசி எண்ணத்திரையில் சின்னத்திரை மெகாதொடரெனசினிமாத்துறைக்குள் அழைத்துச் செல்கிறாய்
மகாதொடராய் நீமணித்தமிழென வாழு!

- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.