வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி



பேய்க்கும் பெயிண்டருக்கும் கசமுசா!

கபாலி சுனாமியில் கரையேறியிருக்கும் பேய்ப்படம்.நிரந்தர வேலை இல்லாத ரத்தன் மெளலிக்கு பாழடைந்த கல்யாண மண்டபத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைக்கிறது. அம்மண்டபத்தின் உரிமையாளரான ஸ்ராவியா செத்துப்போய், அங்கே பேயாக இருக்கிறார். பெயிண்ட் அடிக்க வரும் மெளலிக்கும் பேய்க்கும் நடக்கும் கசமுசாதான் படம்.

பேயுடன் மோதும் காட்சிகளில் ஹீரோ ரத்தன் மெளலி கெத்து காட்டியிருக்கிறார். பேயாக வரும் ஸ்ராவியா அழகாக இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், வையாபுரி, மனோபாலா, ராம்ஜி, சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோரின் பங்களிப்பு அருமை. காமெடி என்ற பெயரில் மொக்கை போடாமல் வாங்கிய சம்பளத்துக்கு சரியாக வேலை பார்த்திருக்கிறார்கள்.

தாஜ்நூர் பின்னணி இசையில் பலம் சேர்க்கிறார். ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் தன்னுடைய அனுபவ ஒளிப்பதிவால் அசத்துகிறார். இராமநாரா யணனின் சிஷ்யரான இயக்குநர் புகழ்மணி, ஆடி சீசனுக்கு அம்மன் படத்தை கொடுக்காமல் ஒரு பேய்ப்படத்தை கொடுத்திருக்கிறார்.