மொட்டு மலரும் பருவம்!



சரோஜாதேவி பதில்கள்

* திரைப்படங்களில் இடம்பெறும் ‘ஏ’த்தனமான
காட்சிகளின் சாதனைதான் என்ன?
- அ.சம்சுதீன், நெய்க்காரப்பட்டி.
கைரேகை ஜோசியர்களின் பிழைப்பு கெட்டதுதான் மிச்சம்

* மொட்டா, மலரா... எது அழகு?
- பொ.சின்னராஜா, குற்றாலம்.
மொட்டு மலரும் பருவம்தான் அழகு.

* ஒளிந்துகொள்ள இடம் வேண்டும். உங்க இதயம் ஃப்ரீயா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
சரோஜாவின் இதயம் என்ன லாட்ஜ் ரூமா? வேற இடம் பார்த்துக்கங்க.

* சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்கிறார்களே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
பாம்பு கடித்தால் பரலோகம், பெண் சிரித்தால் இன்பலோகம் என்று பதில் சொல்லுங்கள்.

* படுக்கையறையை பள்ளியறை என்று சொல்வது ஏன் சரோ?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
புரியாத பாடங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதால் இருக்கும்.