இந்தியில் தாராளம்.. ஐஸ்வர்யாவின் அதிரடி ஐடியா!



இதுவரை தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது மலையாளம் மற்றும் இந்தியில் அறிமுகமாகிறார்.“தமிழ்ல நான் நடிச்சி முடிச்ச ‘தர்மதுரை’, ‘மோ’, ‘பறந்து செல்ல வா’, ‘இடம் பொருள் ஏவல்’ படங்கள் வரிசையா ரிலீசாகும். மலையாளத்துல சித்தார்த் சிவன் டைரக்‌ஷன்ல ஒரு படம் பண்றேன். எனக்கு ஜோடியா நிவின் பாலி நடிக்கிறார்.

இது என் முதல் மலையாளப் படம். மொழி தெரியாது. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல சொல்லித் தர்றதை அப்படியே உள்வாங்கி நடிப்பேன். அடுத்து, இந்தியில அர்ஜுன் ராம்பால் ஜோடியா ‘டாடி’ படத்துல நடிக்கிறேன். இது என் முதல் இந்திப் படம்.

ஷூட்டிங் தொடங்கறதுக்கு முன்னாடி மும்பையில நடந்த ஒர்க்‌ஷாப்புல கலந்துக்கிட்டேன். எனக்கு ஒரு வார்த்தை கூட இந்தி பேசத் தெரியாதுன்னாலும், அவங்க சொல்றதை புரிஞ்சுக்கிட்டு நடிக்கிறேன்” என்கிற அவர், இந்தியில் கிளாமர் காட்டி நடிக்கப் போகிறாராம்.

- தேவராஜ்