‘ஏ’க்கத்துக்கு விருந்து!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

பின்னட்டையில் விளைந்து முத்திப் போயிருந்த கத்தரிக்காயைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியில் வாயடைத்துப் போய்விட்டோம்.
- ச.கார்த்திக், சிங்காநல்லூர்.

பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்த தன் படத்தை கதை மீதான நம்பிக்கையால் மீண்டும் ரீரிலீஸ் செய்யும் ‘காதல்அகதீ’ குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

‘நடுப்பக்கம்’, ‘சரோஜாதேவி பதில்கள்’ என்று நீங்கள் செய்து கொண்டிருக்கும் இன்ப பாவங்களுக்கு பரிகாரமாக அமைந்தது ‘ஹீரோயினிஸம்’ பகுதியில் இடம்பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த அருமையான கட்டுரை.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘இது நம்ம ஆளு’ படத்துக்கு நீங்கள் எழுதிய விமர்சனமும் ‘நான் ஆளான தாமரை’ என்கிற டைட்டிலும் டக்கர்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

‘சரோஜாதேவி பதில்கள்’, ‘ஏ’கத்துக்கும் ஜோரு. அதற்கு பொருத்தமாக உங்கள் லேஅவுட் குழுவினர் தேர்ந்தெடுக்கும் படங்கள் வாசகர்களின் ‘ஏ’க்கத்துக்கு விருந்தாகவும் மருந்தாகவும் அமைகின்றன.
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை

நீங்கள் ஆர்வத்துடன் தொடர்ச்சியாக செய்திகளையும், படங்களையும் பகிர்வதைப் பார்த்தால் ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்கு என்றே பிரத்யேகமாக எடுக்கப்படும் படம் ‘முத்தின கத்தரிக்காய்’ என்று தோன்றுகிறது.
- பொ.சின்னராஜா, குற்றாலம்.

‘வண்ணத்திரை’யின் முதல் இதழிலிருந்தே முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான வாசகராக விளங்கும் வண்ணை கணேசன் (பொன்னியம்மன்மேடு, சென்னை-110) - திருமதி. கஸ்தூரி அவர்களின் மகள் ஜி.சுகன்யாவுக்கும், டி.விஜயநரசிம்மனுக்கும் ஜூன் 16 அன்று திருமணம் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது. மணமக்களுக்கு வாசகர்களின் சார்பில் ‘வண்ணத்திரை’யின் வாழ்த்துகள்!