படையெடுக்கிறார் நெப்போலியன்!



உலக வரலாற்றில் மாவீரன் நெப்போலியனின் படையெடுப்புகள் மிகவும் பிரபலம். தமிழ் சினிமாவிலும் 1991ல் பாரதிராஜாவின் ‘புதுநெல்லு புதுநாத்து’ மூலம் படையெடுத்தார் இன்னொரு நெப்போலியன். ஆரம்பத்தில் வில்லனாக மிரட்டி வந்தாலும் பிற்பாடு ஹீரோ, குணச்சித்திரம், காமெடி என்று அவர் போடாத வேஷமே இல்லை எனலாம்.

தொழிலதிபராக கொடி கட்டிப் பறந்தவர் அரசியலிலும் குதித்து மத்திய அமைச்சராக உயர்ந்தார். தன்னுடைய மகனின் சிகிச்சைக்காக அரசியல், தொழில், சினிமா என்று அத்தனையையும் ஒதுக்கிவிட்டு சிலகாலம் அமெரிக்கா சென்று அமைதியாக வாழ்ந்தார்.இப்போது சினிமாவில் மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு அடித்தளம் போட்டிருக்கிறார்.

பாபிசிம்ஹா தயாரித்து நடிக்கும் ‘வல்லவனுக்கு வல்லவன்’, சசிகுமார் தயாரித்து நடிக்கும் ‘கிடாரி’, ராஜதுரை இயக்கத்தில் ‘முத்துராமலிங்கம்’, இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய நரசிம்மராவ் இயக்கத்தில் ஜெயப்பிரதாவுடன் சரபா (தெலுங்கு) என்று வரிசையாக படங்கள் ஒப்புக்கொண்டு வருகிறார்.சீவலப்பேரி பாண்டி ரிட்டர்ன்ஸ். ஸ்வீட் எடு. கொண்டாடு.

- எஸ்