யோகா டீச்சர்!



நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘வீரப்பன்’ படம் மூலமாக தன் கெத்தை காட்டியிருக்கிறார் ராம்கோபால் வர்மா. படம் பார்த்த விமர்சகர்கள் வர்மாவை பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

ராதிகா ஆப்தே கவர்ச்சி காட்டாமல் நடித்துள்ள ‘போபியா’வுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ் இணைந்து குழந்தைகளுக்கான படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.சேகர் கபூரின் ‘பானி’ படத்தை திடீரென டிராப் செய்துள்ளது யஷ் சோப்ராவின் யஷ் ராஜ் நிறுவனம்.

ஸ்கூபா பயிற்சி பெற்ற சோனாக்‌ஷி சின்ஹா, வாள் சண்டையும் கற்று வருகிறார். இதெல்லாம் படத்துக்காக கிடையாதாம். யாரை வெட்டப் போகிறாரோ?

‘கோல்மால்-4’ படத்தில் அஜய் தேவ்கனுக்கு பதிலாக அக்‌ஷய் குமாரை நடிக்க வைக்க டைரக்டர் ரோஹித் ஷெட்டி திட்டமிட்டுள்ளார். இதுவரை வெளிவந்த மூன்று பாகத்திலும் அஜய்தான் நடித்திருந்தார். என்ன பிரச்னையோ?ஹாலிவுட் சீரியல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ளார் பிரியங்கா சோப்ரா. மீண்டும் ஜூலையில் புது சீரியலுக்காக ஹாலிவுட் செல்கிறார்.

மனிஷா கொய்ராலா தனது பட நிறுவனத்தை புதுப்பித்து குறும்படங்களைத் தயாரிக்க முடிவு எடுத்துள்ளார்.யோகா டீச்சராகவே மாறிவிட்ட ஷில்பா ஷெட்டி, இளம் ஹீரோக்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார்.ஹ்ரித்திக் ரோஷன் 100 சதவீத பர்ஃபெக்ட் நடிகர் என ‘காபீல்’ படத்தில் அவருடன் நடிக்கும் யாமி கவுதம் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்.

- ஜியா