கவர்ச்சிப் புயல் மையம்!



சேச்சி தேசத்து செய்தி

‘பில்லா-2’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியிருக்க வேண்டியவர் அழகு சுனாமி ஹுமா குரேஷி. தமிழர்களுக்கு அவ்வளவு அதிர்ஷ்டமில்லை. இந்தியில் ‘கேங்ஸ் ஆஃப் வசேபூர்’ தொடர் படங்கள் மூலமாக ஓவர்நைட்டில் பாலிவுட் குயீன் ஆனவரின் கடைக்கண் பார்வை என்னவோ தெற்கு பக்கமாகவே இருந்தது.

இப்போது மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ‘ஒயிட்’ படம் மூலம் மீண்டும் இங்கே களமிறங்குகிறார். அடுத்து தமிழ், தெலுங்கு என்று தன்னுடைய அழகாட்சியை விரிவுபடுத்துவாராம்.

கவர்ச்சி என்று இயக்குநர் வாயில் இருந்து வார்த்தை வந்தாலே தாராளமாக வந்து கேமரா முன்பாக நிற்கும் வழக்கம் கொண்டவர் ஹுமா. இங்கிருக்கும் முன்னணி நடிகைகளுக்கு செம காம்பெடிஷன்தான். ஆனால், ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து நிச்சயம்.