தக்காளி பழுத்திடிச்சி!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
நடுப்பக்க சரிதா சர்மாவை பார்த்ததும் உங்களுக்கும் ‘மலை’ப்பா இருக்கு. எங்களுக்கு மலைத் தேன் அருந்தியது மாதிரி மப்பா இருக்கு. - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
 டான்ஸ் மாஸ்டர் தரின் பேட்டியில் அவரது தன்னம்பிக்கையும், தொழில் பக்தியும் வெகுவாக வெளிப்பட்டன. ஹீரோவாகவும் அவர் வெற்றிகாண வாழ்த்துகள். - முருகன், பாப்பிரெட்டிப்பட்டி.
‘ஜோடி சேர்ந்தாச்சி’ கட்டுரையை வாசித்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயன்படும் வகையில் அரிய தகவல்களை தேடிக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
‘தாரை தப்பட்டை’யில் சூறாவளியாக சுழன்றடித்து நடிப்பு சுனாமியாக வெளிப்பட்டிருக்கும் வரலட்சுமி, தமிழ் சினிமாவுக்கு ஓர் அரிதான வரவு. அவரைக் குறித்த ‘ஹீரோயினிஸம்’ கட்டுரை அபாரம். - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
அஞ்சலி சிங்கின் ஸ்டில்லுக்கு நீங்கள் கொடுத்த ‘தக்காளி பழுத்திடிச்சி’ கமெண்ட், ‘ச்சீ... ரொம்ப மோசம்’ வகையிலானது. இனிமேல் தக்காளியை பார்க்கும்போதெல்லாம் அஞ்சலிசிங்தான் ஞாபகத்துக்கு வருவார். - ச.கார்த்திக், சிங்காநல்லூர்.
‘தீபாவளிக்கு ரஜினி படம்’ என்கிற தலைப்பைப் பார்த்ததுமே, ஆயிரம் வாலா சரவெடி வெடித்த சந்தோஷம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த தீபாவளிக்குத்தான் என்று தெரிந்ததுமே புஸ்ஸாகிவிட்டது. - ரஜினிமுருகன், பாண்டிச்சேரி.
இசையமைப்பாளர் இமானின் பாட்டுச்சாலைப் பயணம் பரவசத்துக்கு உள்ளாக்கியது. இளையராஜாவின் அடுத்த வாரிசு என்று ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். - நரேஷ், சித்தூர்.
|