அவலை நினைத்து உரலை...
சரோஜாதேவி பதில்கள்
* பெருசுகள் பலரும் அந்தக் காலத்து ‘அஞ்சரைக்குள்ள வண்டி’ மாதிரி வருமா என்று வெறுப்பேற்றுகிறார்களே! அப்படியென்ன விசேஷம் அந்தப் படத்தில்? - சின்னராஜா, குற்றாலம்.
 இப்போது U/A சான்றிதழ் பெறும் படங்களில் இருக்குமளவுக்குக்கூட ‘சரக்கு’ எதுவுமில்லை என்பதுதான் விசேஷம். பெருசுகளுக்கு அவலை நினைத்து உரலை இடித்துக் கொள்வதே வாடிக்கை.
* மச்சினிச்சி சமையல் மட்டும் மணப்பது ஏன்? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
அறியா ருசி ஆசையைக் கிளப்பும்.
*கனவுக்கன்னி சரோஜா, உங்க ‘அளவு’ என்ன? - ச.கார்த்திக், சிங்காநல்லூர்
பிரும்மாண்டமா கனவு காணாதீங்க டியர். லிமிட்டெட் மீல்ஸ் சாப்பிடும் அளவுதான். * மெரீனா பீச்சில் வாலிபால் ஆடியதுண்டா? - ப.முரளி, சேலம்.
ம்ஹூம். வாலிபபால் மட்டும்தான் ஆடத்தெரியும்.
*காதல் காய்ச்சலுக்கு மருந்து என்ன? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. வியர்க்க, விறுவிறுக்க வேலை பார்ப்பதே தலைசிறந்த மருந்து.
|