இயக்குநர் விக்ரம்!



அந்த டிசம்பர் தொடக்கத்தை மறக்க முடியுமா? சென்னையை மூழ்கடித்த வெள்ளம். மீட்புப் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருக்கா விட்டால் இன்னும் எத்தனையோ உயிர்களை இழந்திருப்போம். அந்த நல்ல உள்ளங்களை மரியாதை செய்யும் வகையில் ‘ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை’ என்கிற வீடியோ ஆல்பத்தை இயக்கி ரிலீஸ் செய்திருக்கிறார் விக்ரம்.

அபிஷேக்பச்சன், விக்ரம், சூர்யா, பிரபுதேவா, ஜீவா, ஜெயம் ரவி, கார்த்தி, சித்தார்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா, நித்யா மேனன் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த ஆல்பத்தில் மின்னுகிறார்கள். கிரிநாத் இசையில் மதன் கார்க்கி, கானா பாலா, ‘டங்கா மாரி’ ராகேஷ் இணைந்து பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு விஜய் மில்டன். நடனம் தர்.

“முன்னணி திரைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்துக்கு மனமுவந்து உதவியிருக்கிறார்கள். எல்லோருமே பிஸியான ஷெட்யூலில் இருக்கிறவர்கள் என்றாலும், என்னுடைய வேண்டுகோளுக்காக தங்களது பணிகளை ஒத்துவைத்துவிட்டு வந்து ஒத்துழைப்பு தந்திருக்கிறார்கள். சென்னை நகரம் குறித்த அன்புதான் எங்களை இணைத்தது” என்கிறார் விக்ரம்.

- எஸ்