மர்மப் பிரதேசம்!



சரோஜா தேவி பதில்கள்

* ஆசைப்பட்டது கிடைப்பதில்லையே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

எது கிடைக்குமோ அதன் மீது ஆசை வையுங்கள்.
* சரோஜாவை நேரில் பார்க்க முடியுமா? சும்மா பேசத்தான்.
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

பேசுறதுக்கு எதுக்கு நேரில் பார்க்கணும்? வேற விஷயம்னா சொல்லி அனுப்புங்க.
* மர்மம் என்கிற சொல்லுக்கே அர்த்தம் மாறிவிட்டதே?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ஆமாம். யாருக்கும் தெரியாத இடத்தை ‘மர்மப் பிரதேசம்’ என்று நல்ல அர்த்தத்தில் எழுதினாலே, அதை ஆபாசப் பொருளில் புரிந்துகொள்கிறார்கள்.
* மனைவி ஒரு மந்திரியா?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

இல்லை. கணவனுக்கு எப்போது பூஜை செய்ய வேண்டும் என்று தெரிந்த மந்திரவாதி.
* பிரணிதாவை படங்களில் காணவில்லையே?
- ப.முரளி, சேலம்.

இந்தப் படத்தைப் பார்த்து தற்காலிகமா ‘கூல்’ ஆகிக்கோங்க...