பிரணீதா லவ்வு! சார்மி கடுப்பு!



அவ்ளோதான் மேட்டர்

கன்னடப் பைங்கிளி பிரணீதாவுக்கு தமிழில் அவ்வளவு மவுசு இல்லை. ‘சகுனி’, ‘உதயன்’ ‘மாசு என்கிற மாசிலாமணி’ என்று அவர் நடித்த படங்கள் அவ்வளவாகப் போகவில்லை. ஆனால்- அக்கட தேசமான சுந்தரத் தெலுங்கு பேசும் தெலுங்கானாவிலும், சீமாந்திராவிலும் அம்மணிக்கு செம ரிசப்ஷன். அதற்குள்ளாகவே காதல்வலையில் விழுந்துவிட்டார் என்றும் பேச்சு.

ஏற்கனவே மம்தா மோகன்தாஸ், சாமி ஆகியோரோடு கிசுகிசுக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவிபிரசாத்தோடு பிரணீதாவுக்கு மையல் என்று கேள்வி. விஷயம் கேள்விப்பட்ட சார்மிதான் பிரணீதா மீது பயங்கர காண்டில் இருக்கிறாராம். எப்போது வேண்டுமானாலும் குடுமிப்பிடி சண்டை நிகழ்ந்தேறலாம் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்.

- தேவா