லட்சுமிமேனன்தான் எனக்கு பெஸ்ட் ஜோடி!



சிரித்த முகம். சிம்பிள் அப்ரோச். சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபு, எப்போதும் நண்பர்களின் தொடர்பு எல்லைக்குள்ளாகவேதான் இருக்கிறார்.

 ‘இது என்ன மாயம்’ கொடுத்திருக்கும் பாசிட்டிவ் ரிப்போர்ட்டில் வழக்கத்தைவிட கூடுதல் குதூகலத்தோடு இருந்தார்.“இது என்ன மாயம்?”“வெள்ளக்கார துரை’ படத்துக்குப் பிறகு  என்னுடைய பாடி லேங்வேஜை மாற்றிக் காட்டியிருக்கு.

முன்பெல்லாம் கேமிரா முன்னாடி பொரிந்து தள்ளுவேன். இதில்தான் நின்னு நிதானமாகியிருக்கேன். டெக்னிக்கலா பார்த்தீங்கன்னா, இந்தப் படத்துல நீரவ்ஷா, ஜி.வி.பிரகாஷ்னு பெரிய டீமோடு நல்ல எக்ஸ்பீரியன்ஸ். படம் பார்த்த நிறைய பேர் ‘அறிவு’ கேரக்டரை இன்ச் பை இன்ச்சா நினைவு கூர்ந்து பேசுறாங்க. ரொம்பவே சந்தோஷம்.”

“இயக்குனர் விஜய்க்கு ஏதோ செல்லப்பெயர் வெச்சிருக்கீங்களாமே?”“இந்தப் படத்துல நிறைய புதுமுகங்கள். எல்லாருக்கும் ஸ்பாட்ல பொறுமையா டைரக்டரே நடிச்சி காண்பிப்பார். ஏதாவது தேவைன்னா யாருக்காகவும் காத்திருக்கமாட்டார். அவரே உதவி இயக்குனராகவும் மாறி வேலை பார்ப்பார்.விஜய் சாரை நான் ‘மீட்டர்’னு தான் அழைப்பேன். ஏன்னா, ‘வெள்ளக்கார துரை’ படத்துல எதையும் சத்தமாகப் பேசி நடிக்கணும்.

ஆனால் இதில் எல்லாத்தையும் மீட்டருக்குள் பண்ணுன்னு திரும்பத் திரும்பச் சொல்வார். மீட்டருக்கு மேல கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆனாலும் ‘அசல் நடிப்பா இருக்கு.  கொஞ்சம் குறைங்க பாஸ்’ன்னு சொல்வார். ஹீரோயின் கீர்த்தியும், நானும் டென்ஷனாகி ‘இது கூட செய்யலைன்னா எப்படி சார் நாங்கள்லாம் ஆக்டர்ஸ்?’ என்று மல்லு கட்டுவோம்.

ஆனால், மனுஷன் அவருக்கு வேண்டியதை வாங்குவதில் மட்டுமே தெளிவா இருப்பாரு. எல்லா வேலைகளையும் ஸ்பாட்லேயே முடிச்சாகணும். எடிட்டிங்ல பார்த்துக்கலாம், கிராபிக்ஸ்ல பார்த்துக்கலாம்ங்கிற மாதிரி ‘லாம்’ எல்லாம் விஜய் சார் டிக்‌ஷனரியிலேயே கிடையாது.”“லட்சுமி மேனனா, கீர்த்தி சுரேஷா... யாரு பெஸ்ட்?”

“வம்புக்கு அலையறீங்களே ப்ரோ? என்னோடு நடிச்ச நடிகைகள் எல்லோரும் அவரவர் அளவில் திறமைசாலிகள்தான். கீர்த்தியை எடுத்துக்கிட்டீங்கன்னா மோகன்லால், திலீப் போன்ற மலையாளத்தின் பெரிய ஹீரோக்களோடு நடிச்சிருக்காங்க. அவங்க அம்மா மேனகா பெரிய நடிகைன்னு நமக்கே தெரியும். அப்பாவும் தயாரிப்பாளர். நடிப்பு அவங்க ரத்தத்தில் கலந்திருக்கு. லட்சுமி மேனனும் சும்மா சினிமாவுக்கு வந்துடலை. அம்மா பரத நாட்டிய டீச்சர். பாட்டி சிங்கர்.

எனக்கு எந்த ஜோடி பெஸ்ட்டுன்னு கேட்டீங்கன்னா லட்சுமி மேனன்தான்னு ரசிகர்கள் சொல்லுறாங்க. வெயிட்டு, ஹைட்டுன்னு எல்லா ஆஸ்பெக்ட்டிலும் அவர்தான் எனக்கு பர்ஃபெக்ட். என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகை தமிழ் பேசினாலே சீக்கிரத்தில் ‘ஜெல்’லாகி விடுவேன் (‘ஜொள்ளு’ கிடையாதுங்க, ‘ஜெல்லு’). அந்த வகையில் என்னுடன் நடித்த பிரியா ஆனந்தும், திவ்யாவும் ஓக்கேதான்.

தமிழ் தெரியாத சுரபியுடன் நடிக்கும்போதுதான் கொஞ்சம் அசெளகரியமாக இருந்தது.”“அடுத்து?”“குமரவேல் இயக்கும் ‘வாகா’, ‘ரோமியோ ஜூலியட்’ எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் கணேஷ் விநாயக் இயக்கும் படம்னு ஓடிக்கிட்டே இருக்கேன்.”

-சுரேஷ் ராஜா