சூப்பர்ஸ்டாரிடம் செல்போன் இல்லை!



ரஜினி வழி எப்போதுமே தனிவழி. அவரது கவனத்துக்கு ஒரு முக்கியமான விஷயம் செல்ல வேண்டும் என்றால், அவரது உதவியாளர்களிடம் பேச வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டிலுள்ள லேண்ட் லைன் நம்பருக்கு போன் செய்து, விஷயத்தைச் சொல்லிவிடலாம். ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொண்டு யார் யார் எந்த விஷயத்துக்காக பேசினார்கள் என்கிற விவரத்தை ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார்கள்.

முக்கியமான விஷயம் என்றால், ரஜினியே சம்பந்தப்பட்ட நபரிடம் போனில் பேசுகிறார். தனக்கென்று தனி செல்போன் வைத்துக்கொள்ளாத சூப்பர்ஸ்டார், தனது நண்பர்களின் செல்போன் அல்லது வீட்டின் லேண்ட் லைனில் இருந்து பேசுவார். சந்திப்பு போன்ற விஷயங்கள் அவரது போயஸ் கார்டன் வீட்டிலா அல்லது ராகவேந்திரர் திருமண மண்டபத்திலுள்ள அலுவலகத்திலா என்பதை அவரே முடிவு செய்வார்.

- தேவராஜ்