காதல் சண்டை!



குத்துப் பாடல்களில் கெத்துக்காட்டும் காந்த்தேவா, மெலடி மெட்டுகளைக் கொடுத்திருக்கும் படம் ‘கலை வேந்தன்’. ‘‘வியட்நாம் நாட்டு தேசியக்கலை ஓவினாம். இது கராத்தே, குங்ஃபூ போல வலிமையான தற்காப்புக்கலை. அந்தக் கலையைக் கற்றுத் தரும் மாஸ்டர் அஜய், மாணவி சனம் ஷெட்டி இடையே காதலும், அதைத்தொடர்ந்து பிரச்னையும் வருகிறது. தீர்வு என்ன என்பதே கதை’’ என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.கமலக்கண்ணன்.

 ஓவினாம் கலையில் பயிற்சி பெற்ற நூறு கலைஞர்களை காரைக்காலில் இருந்து அழைத்து வந்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சையத் மற்றும் நாக் அவுட் நந்தா அமைத்துள்ள ஆக்‌ஷன் காட்சிகள் எங்கள் படக்குழுவுக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும்’’ என்று நம்பிக்கை வார்த்தைகளால் பேசுகிறார் இயக்குநர் ஆர்.கே.பரசுராம்.

- என்