சோன்பப்டி



ஒரு நாள் நாயகன்யும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் நிரஞ்சனாவும் காரில் பயணம் செய்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் மர்மமான முறையில் ஒரு சிறுவன் காரின் பின் சீட்டில் இருக்கிறான். அதைப் பார்த்ததும் யும், நிரஞ்சனாவும் அப்படியே ‘ஷாக்’காகிறார்கள்.

 யார் அந்த சிறுவன்? அவன் எப்படி காருக்குள் வந்தான்? அதன் பிறகு என்ன நடந்தது என்பது ஒரு கதை. இன்னொரு கதையில் யும் அவருடைய நண்பர்களும் தங்கள் லட்சியத்தை அடைவதற்கு எப்படிப் போராடுகிறார்கள்? அந்த முயற்சி சுபமா, சோகமா என்பது மீதிக் கதை. 

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்த யிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நாயகி நிரஞ்சனாவுக்கு முதல் பாதியில் இருந்த முக்கியத்துவம் இரண்டாம் பாதியில் இல்லை. யின் நண்பர்களாக வரும் அந்த மூவரும் தங்கள் முக்கியத்துவத்தை அறிந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா லேட்டாக வந்தாலும் கவனம் ஈர்க்கிறார். தனது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தாணு பாலாஜி. படத்துல ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும் இயக்குனர் சிவாணிக்கு இது முதல் படம் என்பதால் கருணை காட்டலாம்.