ஜோதிகாவின் சாதனை! சூர்யாவின் கருணை!
‘‘ப்ளஸ் டூ மாணவி போல் என் மனைவி ஜோ ‘36 வயதினிலே’ படத்தின் படப்பிடிப்பின் போது இரவு ேநரத்தில் டயலாக்குகளைப் படிப்பார்’’ என ஜோதிகாவைப் பற்றி ‘36 வயதினிலே’ படத்தின் வெற்றி விழாவில் பெருமிதம் பொங்க பேசினார் சூர்யா. ‘‘இந்தப் படம் வெற்றிப் படம் என்பதைத் தாண்டி பல பெண்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.
பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மீதான பார்வை மாறியுள்ளது. இதுதான் இந்தப் படத்தின் சாதனை. வழக்கமான ரசிகனைப் போல் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன். என் மனைவி என்பதையும் தாண்டி இதில் ஜோதிகாவின் நடிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது’’ சிலிர்க்கிறார் சூர்யா.
இந்த நிகழ்வின் இன்னொரு அம்சமாக சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் சார்பில் 25 பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் விதத்தில் அவரவர் தகுதிக்கு ஏற்ப உதவிகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு பெண்ணுக்கு இரண்டு கால்களுமே கிடையாது. அவருக்கு சென்னையில் பியூட்டி பார்லர் தொடங்க உதவி செய்திருக்கிறார்கள். நல்ல மனம் வாழ்க!
-ரா
|