ஒரு மலை கிராமத்தில் உள்ள கோயிலில் காளி சிலை தானாகவே சுழலுகிறது. காளி மனதைக் குளிரச் செய்ய கிராமத்துப் பெண்கள் நிர்வாண பூஜை நடத்துகிறார்கள். இதைக் கேள்விப்படும் ஒரு மீடியா குழு காட்டுக்குள் பயணம் செய்கிறது.
கிராமக் கட்டுப்பாடு, காவலாளிகளின் கொலை மிரட்டல் என பல அச்சுறுத்தல்களைச் சந்திக்கும் மீடியா குழு தடைகளைத் தாண்டி நிர்வாண பூஜையில் இருக்கும் மர்மத்தைத் தெரிந்து கொண்டதா என்பதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் அருண், நாயகி கோபிகா இருவரும் கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறார்கள். மனோபாலா, ஆர்த்தி இருவரும் வாயைத் திறந்தவுடன் தியேட்டரில் சிரிப்பு சத்தத்தைக் கேட்க முடிகிறது. முசி.அரா இசையில் பாடல்கள் செவிகளுக்கு இனிமை. மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. அர்த்தமுள்ள வசனத்தின் மூலம் மூடநம்பிக்கைக்கு சாவு மணி அடிக்கிறார் இயக்குனர் சாய்ராம்.