ஆன்மிகம் விரும்பும் ஆஷ்னா!



சந்தானம் ஹீரோவாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. இப்போது மீண்டும் அவருடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் இணைந்திருக்கிறார். ‘நறுக்’ கேள்விகளுக்கு ‘சுருக்’கென பதிலளிக்கிறார் ஆஷ்னா.

சொந்த ஊர்? மும்பை

படிப்பு? ஃபைன் ஆர்ட்ஸ்

துவக்கம்? மாடலிங்

திருப்புமுனை? ஷாருக்கானுடன் நடித்த டீ விளம்பரம்

அதனால் பயன்?  ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் சந்தானத்துடன்? என் திறமைக்கு மரியாதை

லட்சியம்? தமிழில் முன்னணி

தமிழ் தெரியுமா? கற்றுக்கொண்டிருக்கிறேன்

யாருக்கு ரசிகை? ஷாருக்கான், காஜல், ரஜினி, கமல்

தமிழ்நாட்டில் பிடித்தது? சிவன் கோயில்கள்.

சினிமா தவிர்த்து? ஆன்மிகம் பிடிக்கும்.