வேதிகா
கொடுக்கிற தெய் வம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொடுக்கும்னு சொல்வாங்க. அப்படி தெய்வம் கொடுக்கிறப்போ அள்ளி வைக்க வகையில்லாமப் போறது பெரிய கொடுமை. அப்படியொரு கொடுமைதான் வேதிகாவுக்கு. பாலாவோட 'பரதேசி'ல சிவப்பா இருந்த வேதிகா கருப்பு கண்ணாத்தாளாகி கலங்கி, உருகி நடிச்சாங்க.
தேசிய விருதே கிடைக்கும்னு சொன்னாங்க. கிடைச்சது வேதிகாவுக்கு இல்ல. அவுங்க போட்டிருந்த டிரஸ்சுக்கு. அப்புறம் வசந்தபாலனோட 'காவியத் தலைவன்'ல காதலுக்கு ரெண்டு பேரு மோதிக்கிற அளவுக்கு வலுவான காவியத் தலைவி. அப்படியிருந்தும் எதுவும் நடக்கவில்லை. அடுத்து வாய்ப்பு தரவும் ஆள் இல்லை. கன்னடத்துப் பக்கம் போய்விட்டார்.
நம்ம ஊர் பி.வாசு கன்னடத்துல இயக்குற 'ஷிவலிங்கா'வுல ஹன்சிகா, திரிஷா ரேஞ்சுக்கு பக்கா கமர்ஷியல் ஹீரோயினா சீனியரான சிவராஜ்குமாரோடு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். 'என்னங்க கஷ்டப் பட்டு நடிச்சும் கவனிக்க ஆளில்லாம போயிட்டீங்களே?' என்றால்...
"எதுவுமே நம்ம கையில இல்லீங்க. எனக்கு கொடுக்கப்பட்ட வேலைய கரெக்டா செஞ்சேன். அதை பாராட்ட வேண்டியவங்க பாராட்டத்தான் செய்தாங்க. பாலா, வசந்தபாலன்ங்கற இரண்டு பெரிய இயக்குனர்கள் என் திறமையை மதிச்சாங்க. அவுங்க படத்துல நடிச்சதே பெரிய வெற்றிதான். கன்னடத்துல கமர்ஷியல் படங்கள்தான் நடிக்கிறேன்.
எங்கே எந்த வாய்ப்பு கிடைக்கிறதோ அதை செய்ய வேண்டியது தான். முத்தக் காட்சியா, பிகினியா, கிளாமரா என்று இயக்குனர் கேட்கக்கூடாது. அந்த கேரக்டர் டிமாண்ட் பண்ணினா நானும் ரெடிதான்" என்கிறார் வேதிகா.
-கதிர்