இந்தியாவில் வசிக்கும் மதிவாணன் பணி இடமாற்றம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார். அங்கே ஆஸ்திரேலியப்பெண் மெலிசாவை சந்திக்கிறார். காதல் மலர்கிறது. இதற்கிடையே இந்தியப்பெண் இந்திராவின் நட்பு கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் மதிவாணனின் வீட்டிலிருந்து மெலிசாவின் பிணத்தை போலீஸ் தோண்டி எடுக்கிறது. மெலிசா வின் கொலைக்கு காரணம் யார்? கொலைப் பழியிலிருந்து நாயகன் தப்பித்தாரா, இல்லையா என்பது தான் கதை.
நாயகன் மதிவாணன் அளவாக நடித்திருக்கிறார். மெலிசாவுக்கு வெள்ளைத் தோல் அழகு என்றால், இந்திராவுக்கு வசீகரமான முகம் அழகு. அனுபமா குமார் லேட்டாக வந்தாலும் அவர் எதற்கு வந்திருக்கிறார் என்பது புரிகிறது. ஆஸ்திரேலியாவின் அழகைக் கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் பிரேம். பாவலர் சிவா இசையில் பாடல்கள் இனிமை. படத்தில் கமர்சியல் அம்சங்கள் இல்லையென்றாலும் விறுவிறுப்பாக கதை சொல்லி அசத்தியிருக்கிறார் மதிவாணன் சக்திவேல்.