சேர்ந்து போகலாமா



நியூசிலாந்தில் புகழ்பெற்ற போட்டோகிராபர் விநய். அவரிடம் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக வருகிறார் ப்ரீத்தி கிறிஸ்டினா பால். முதல் பார்வையிலேயே காதல் பிறக்கிறது., ஒரு கட்டத்தில் காதலி கல்தா கொடுக்கிறார்.

ஆனால் விநய், காதலியை பின் தொடர்கிறார். இதற்கிடையே தன் தம்பியின் மரணத்துக்கு விநய்தான் காரணம் என்று முடிவு செய்யும் நாயகி மதுரிமா, அவரை கொல்ல முயற்சி செய்கிறார். கொலை அபாயத்திலிருந்து விநய் தப்பித்தாரா? அவருக்கு காதலி கிடைத்தாரா? என்பதை திடுக் திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

விநய்க்கு நிஜத்திலும் சாக்லெட் பாய் லுக் என்பதால்  சாக்லெட் பாய் ரோலில் யதார்த்தம் காட்டுகிறார். மதுரிமா, ப்ரீத்தி கிறிஸ்டினா பால் இருவரும் கிளாமர் குயினாக வலம் வருகிறார்கள்.

அடிக்கடி கெட்-அப்பை மாற்றி செட்-அப்பை மாற்றி சிரிக்க வைக்கிறார் தம்பி ராமையா. விஷ்ணு மோகன் சித்தாரா இசையில் பாடல்கள் உயர்தரம். நியூசிலாந்தின் அழகை சஞ்சிவ் ஷங்கர்  அருமையாக படமாக்கியிருக்கிறார். காதல் கதையில் சஸ்பென்ஸ் கலந்து ரசிக்க வைக்கிறார் அனில் குமார்.