எம்.ஜி.ஆர் நடித்த பிளாக் அண்ட் ஒயிட் படமாக இருந்தாலும் சரி, ரஜினி நடித்த கலர்ப்படமாக இருந்தாலும் சரி, அந்தப் படங்களை இப்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்குவது தான் கோலிவுட்டில் வேகமாகப் பரவும் டிரெண்ட்.
அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘காமராஜ்’ படத்தை நவீன மாற்றங்களுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிட இருக்கிறார் அதன் இயக்குநர் பாலகிருஷ்ணன். காமராஜரின் ரஷ்ய பயணம் உட்பட 15 புதிய காட்சிகளை இணைத்திருக்கிறார்களாம்.
காமராஜாக நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்துவிட்டதால், அவருடைய மகன் பிரதீப் மதுரம் காமராஜர் கேரக்டரில் நடித்திருக்கிறார். பெரியார் வேடத்தில் விஜயகுமார் நடித்திருக்கிறார். இசை இளையராஜா.
‘‘மூன்று முறை முதலமைச்சராக இருந்த காமராஜர் இறக்கும்போது 101 ரூபாய்தான் அவருடைய சொத்து மதிப்பு. அவரது வாழ்க்கையைப் படமாக்கியதை பெருமையாகக் கருதுகிறேன்” என்கிறார் பாலகிருஷ்ணன்.
-ரா